இந்தி நடிகர்கள் ரிஷிகபூர், இர்பான் கான் , சுஷாந்தி சிங் ராஜ்புத், நடன இயக்குனர் சரோஜ்கான் என அடுத்தடுத்து பிரபலங்கள் இறந்தது பாலிவுட்டையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில் பிரபல படத் தயாரிப் பாளரும் இயக்குனருமான ஹரிஷ் ஷா இன்று மரணம் அடைந்தார். சென்ற பத்து ஆண்டு களாக தொண்டை புற்றுநோயால் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு 76 வயது ஆகிறது.
குடும்பத்தினர் முன்னிலையில் இறுதி சடங்குகள் மாலையில் மும்பை பவன் ஹான்ஸ் சுடுகாட்டில் ஹரிஷ் ஷா உடல் தகனம் நடந்தது.
பல பாலிவுட் படங்களை தயாரித்து இயக்கியுள்ளார் ஹரிஷ் ஷா. ராஜேஷ் கண்ணா நடித்த ’மேரே ஜீவன் சாதி மற்றும் ராம் தேரே கிட்னே நாம் போன்ற படங்களை தயாரித்த ஹரிஷ் ஷா நடிகர்கள் தர்மேந்திரா, சத்ருகன் சின்ஹா நடித்த சல்சாலா மற்றும் ரிஷி கபூர்- நீது சிங் நடித்த தன் தவுலத் ஆகிய படங்களை இயக்கினார்.