சென்னை: மரணத்தின் வலியை கடந்து செல்ல முடியவில்லை – தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என்று தெரிவித்துள்ள ஆதவ் அர்ஜூனா”கரூரில் ஏற்பட்ட இழப்பையும், வலியையும் சராசரி மனிதனாக கடந்து செல்லும் மனநிலையில் நான் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை செப்டம்பர் 27 அன்று கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். பரப்புரைக்காக ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி இருந்தனர். விஜய் பேசத் தொடங்கிய போது ஒலிவாங்கி சரியாக வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதற்கு அந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது காரணமாக கூறப்படுகிறது. இதனால் தவெகவினர், விஜயின் பேச்சைக் கேட்கப் பிரச்சார வாகனத்தின் முன்பு முன்டியடித்துக்கொண்டனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பொது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், சிக்கியவர்களில் 41 பேர் இதுவரை உயிரிழந்த நிலையில், இன்னும் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் உத்தரவின் பெயரில் சம்பவ இடத்திற்கு செந்தில் பாலாஜி மற்றும் அன்பில் மகேஷ் உடனடியாகச் சென்றனர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போர்க்கால அடிப்படையில் ஆலோசனை மேற்கண்டார். பின்னர் கரூர் விரைந்து வந்த முதலமைச்சர் முக ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து உயிரிழந்த தொண்டர்களின் குடும்பத்தினருக்குத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தலா ஒருவருக்கு 20 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும் நிவாரணமாக அளிக்கப்பட்டது.
இந்த சம்பவத்துக்கு விஜய் வருத்தம் தெரிவித்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர்கள் யாரும் விளக்கம் அளிக்காமல் மவுனம் காத்தனர். இந்த நிலையில், தற்போது தவெக தேர்தல் வியூக வகுப்பாளரான அர்ஜுனா பேசி தனது மனக்குமுறலை கொட்டி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய துக்கத்தைக் கடந்த 24 மணி நேரமாக அனுபவித்து வருகிறேன். கரூரில் ஏற்பட்ட மரணங்கள் என்னுடைய நெஞ்சை இன்னும் ஒலுக்கி கொண்டே இருக்கிறது. தற்பொழுது மரணத்தின் வழியையும் அந்த மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழி இல்லாமல் தவித்து வருகிறேன்.
ஒருவருடைய மரணத்தின் வலி என்பதை நான் ஐந்து வயது சிறுவனாக இருக்கும் பொழுதே என்னுடைய தாயின் தற்கொலையில் பார்த்தேன் அதை உணர்ந்தவன்.அந்த வலியை தற்பொழுது மீண்டும் ஏற்படுத்தி உள்ளது அதை அனுபவித்து வருகிறேன். இந்த நிமிடம் வரை கடந்து செல்ல முடியாமல் தவிக்கும் உறவுகளுக்கும் குடும்பத்தினருக்கும் மீளாத் துயரத்தை ஆழ்த்தியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இது ஈடு செய்ய முடியாத இழப்பு ஒரு சராசரி மனிதனாக இந்த ஒரு வழியையும் வேதனையும் கடந்து செல்லும் மனநிலையில் என் மனம் இப்பொழுது இல்லை. கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஓர் அண்ணனாக, ஒரு தம்பியாக, மகனாக அவர்களின் குடும்பங்களின் கனவுகளையும் நம்பிக்கையும் சுமந்து செல்லும் ஓர் உறவாகவே என்னுடைய பயணம் இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என்று ஆதார் அர்ஜுனா பதிவிட்டுள்ளார்