ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்திப் படம் ‘விக்கி டோனர்’. ரொமான்டிக் காமெடி வகையைச் சேர்ந்த இந்தப் படம், விந்து தானம் மற்றும் குழந்தைப்பேறின்மை ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

‘ஸ்டார்பக்’ என்ற கனடாப் படத்தைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தைத் தமிழில் ரீமேக் செய்ய ஸ்கிரீன் ஸீன் மீடியா என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் முடிவெடுத்தது.

‘தாராள ராஜா’ எனத் தலைப்பு வைக்கப்பட்ட இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார்.

தான்யா ஹோப் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் விவேக் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். கிருஷ்ணா மாரிமுத்து இயக்கவுள்ள இந்தப் படத்தில் அனிருத், ஷான் ரோல்டன், விவேக் – மெர்வின், மேட்லி ப்ளூஸ், பரத் ஷங்கர், ஊர்கா குழு, கபீர் வாசுகி மற்றும் இன்னோ கங்கா என 8 இசையமைப்பாளர்கள் பணிபுரிந்துள்ளனர்.

படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து வெளியீட்டுக்குத் தயாரான நிலையில், ‘தாராள பிரபு’ மார்ச் 13-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த படத்தின் ஸ்னீக் பீக் (Dharala Prabhu Sneak Peek) வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

[youtube-feed feed=1]