இயக்குநர் செல்வராகவனுக்கு சமீபத்தில் 3வதாக ஆண் குழந்தை பிறந்தது. ரிஷிகேஷ் என்று பெயரிட்டுள்ளனர். குழந்தையின் புகைப்படங்களை, செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், தனது அண்ணன் செல்வராகவன் மகனை தனுஷ் ஆசையுடன் அள்ளிக் கொஞ்சம் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி செல்வராகவன்.

தனுஷுடன் தனது மகன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த கீதாஞ்சலி, ”வணக்கம் சித்தப்பா, நான் கிங் காங் விளையாடலாமா?” என்று குழந்தை கேட்பது போல் பதிவு செய்துள்ளார்.

அதற்கு தனுஷின் மனைவி ஐஸ்வர்யா, மிக அழகாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.