2015 இல் வெளி வந்து மலையாள சினிமாவில் சூப்பர் ஹிட் ஆன படம் பிரேமம். இந்தப் படம் கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

இந்த படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடிக்க அனுபமா, சாய் பல்லவி, மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகியோர் அவருடன் நடித்திருந்தனர். இந்த படம் சூப்பர்ஹிட் ஆன பிறகு அவர்கள் நால்வரும் முன்னணி நடிகைகளாக வளர்ந்து உள்ளனர்.

சூப்பர் ஹிட் ஆன பிரேமம் படத்தை தமிழிலும் ரீமேக் செய்ய வேண்டுமென பலரும் கேட்டனர். ஆனால் சென்னையில் மட்டுமே இந்த படம் 250 நாட்கள் ஓடியது, இதனால் ரீமேக் செய்யும் எண்ணம் கைவிடப்பட்டது .

இந்நிலையில் பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தமிழில் பிரேமம் ரீமேக் செய்தால் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார் .பிரேமம் படம் மூன்று விதமான பருவங்களில் நடப்பது போன்ற கதை என்பதால் தனுஷ் தமிழ் ரீமேக்கில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்.