
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகும் ‘அத்ரங்கி ரே’ இந்திப் படத்தில் அக்ஷய் குமார், சாரா அலிகான் ஆகியோருடன் இணைந்து தனுஷ் நடித்து வருகிறார்.
அத்ரங்கி ரே’ படத்தை டி-சீரிஸ் நிறுவனம் வழங்க கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அத்துடன் ‘நமது இசைப்புயலுடன் அரட்டை அடிப்பதும் பாடுவதும் மகிழ்ச்சி’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ‘அத்ரங்கி ரே’ படத்தில் தனுஷ் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடவுள்ளது ஊர்ஜிதமாகியுள்ளது .‘மரியான்’, ‘ராஞ்சனா’ ஆகிய படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தாலும் இதுவரை அவரது இசையில் தனுஷ் பாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
‘
Patrikai.com official YouTube Channel