தனுஷ் நடிப்பில் மித்ரன் கே.ஜவஹர் இயக்கும் படம் திருச்சிற்றம்பலம். நான்காவது முறையாக தனுஷ் – மித்ரன் கூட்டணி இணைகிறது. இப்படத்திற்கு தனுஷ்தான் கதை, திரைக்கதை மற்றும் வசனங்கள் எழுதியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பு.
இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே நித்யா மேனன் ஒரு கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் இப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர் .
சமீபத்தில் பாண்டிச்சேரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தனுஷ் மற்றும் நித்யா மேனன் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்று உள்ளது.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.