கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண் குயின் படத்தின் இரண்டரை நிமிட ட்ரெய்லர் வெளிவந்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள பெண் குயின் படம் நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளிவர உள்ளது.

வரும் 19ம் தேதி பென்குயின் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் தற்போது அதை விளம்பரப் படுத்தும் நோக்கத்தில் டீசர் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டு உள்ளது.

நடிகர் தனுஷ் தான் பெண் குயின் பட ட்ரெய்லரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். “The extraordinary journey of a mother begins” என தனுஷ் குறிப்பிட்டு உள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கிலும் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழில் தனுஷ் வெளியிட்ட நிலையில், மலையாளத்தில் மோகன்லால் மற்றும் தெலுங்கில் நாணி ஆகியோர் பெண்குயின் ட்ரெய்லரை வெளியிட்டு உள்ளனர்.

[youtube-feed feed=1]