ஆனந்த் எல்.ராய் இயக்கிய ‘ராஞ்சனா’ என்ற படம் மூலம் இந்தி சினிமாவில் காலடி எடுத்து வைத்த தனுஷ், அதே இயக்குநரின் ‘அட்ராங்கி ரே’ இந்தி படத்தில் இப்போது நடித்து வருகிறார்.
அவருடன் அக்ஷய்குமார், சாரா அலி கான் ஆகியோரும் இணைந்து நடிக்கிறார்கள்.
வாரணாசியில் ஆரம்பித்த படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் மாதம் மதுரையில் தனுஷ் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.
இதன் இறுதி கட்ட ஷுட்டிங் இப்போது டெல்லியில் நடந்து வருகிறது.
தனுஷ், அக்ஷய்குமார், சாரா அலி கான் தொடர்பான காட்சிகள் படமாக்கப்படுகின்றன.
கிரேட்டர் நொய்டாவில் உள்ள தனியார் பல்கலைகழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று, தனுஷ் பங்கேற்ற காட்சிகளை இயக்குநர் ஆனந்த் ராய், படமாக்கினார்.
பல்கலைகழக மாணவர்களுடன், உள்ளூர் பகுதி ஆட்களும் தனுஷுடன் சேர்ந்து நடித்தனர்.
அடுத்த ஆண்டு காதலர் தினத்தில் ‘அட்ராங்கி ரே’ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்த படத்தில் சாரா அலிகான் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
– பா. பாரதி