சென்னை: தனது அனுதி பெறாமல் ஆவணப்படத்தில் காட்சிகளை பயன்படுத்தியதாக, நஷ் ஈடு கேட்டு , நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது நடிகர் தனுஷ் தொடர்ந்துள்ள வழக்கில், அவர்கள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
முன்னணி சினிமான நடிகையான நயன் தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. நடிகை நயன் தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் கல்யாண ஆவண படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது ஓடிடி தளத்தில் வெளியிட்டது.
இதனிடையே அந்த திருமண ஆவண படத்தில் நடிகர் தனுஷ் தயாரித்த நானும் ரௌடி தான் படக்காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக ரூ.10 கோடி கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் அடுத்து, இதுதொடர்பாக நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஜனவரி 8ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.