தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர்
தனுஷ் – அனிருத் கூட்டணிக்கென்ற இசையுலகில் ஒரு பெரிய ரசிகர் வட்டம் உருவானது. ஆனால், இந்தக் கூட்டணி ‘தங்கமகன்’ படத்துக்குப் பிறகு மனஸ்தாபத்தால் இணைந்து பணிபுரியவே இல்லை.


இந்நிலையில் தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

[youtube-feed feed=1]