சென்னை: பிரபல நடிகர் தனுஷ் – அவரது மனைவி ஐஸ்வர்யா இடையே மோதல் போக்கு நீடித்த நிலையில், அவர்கள் தரப்பில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுமீதான விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று இருவருக்கும் விவாகரத்து வழங்கி குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் நவம்பர் 27ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெற்றது. இதற்கு இருவரும் நேரில் ஆஜராகினார். அதைத்தொடர்ந்து, இரு தரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி, இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பில் நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ஆகியோருக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்மூலம் அவர்களின் 18 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
[youtube-feed feed=1]தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து கிடைக்குமா? நவம்பவர் 27ந்தேதி தீர்ப்பு