திரையுலகில் ஹீரோ, ஹீரோயின்கள் ரசிகர்களிடம் பிரபலம். அதற்கடுத்த படியாக டெக்னிஷியன்களை தெரியும் ஆனால் இவர்களையும் தாண்டி பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர் இறந்தநிலையில் அவருக்கு தனுஷ் நடிகை அஞ்சலி மெசேஜ் போட்டிருக்கிறார்.
தனுஷ் நடிக்கும் புதிய படம் ‘கர்ணன்’. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். மாரி செல்வராஜ் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதில் ஹீரோயினாக ரஜிஷா விஜயன் நடித்து வருகிறார். இவர் மலையாளத்தில் நடித்த ‘ஜூன்’, ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’, ‘ஒரு சினிமாக்காரன்’ படங்கள் வரவேற்பு பெற்றிருக்கிறது.
ரஜிஷா விஜயன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அதில் ”அஞ்சலி (RIP) சிந்தா தேவி. இவர் யாரென்று பலருக்கு தெரியாது. மலையாள உலகில் ஹேர் ஸ்டைலிஷ்டாக பணிபுரிந் தார். கேன்சரால் பாதிக்கப்பட்டார். நான் உங்களுடன் பணிபுரிந்ததில்லை சகோதரி. உங்கள் பணி எப்பொழுதும் எங்களால் நினைவு கொள்ளப்படும்” என தெரிவித்திருக்கிறார்.
சிந்தா தேவி கேன்சரால் பாதிக்கப்படு இறந்தார்.
Patrikai.com official YouTube Channel