சென்னை: தமிழகத்தில் டிஜிபிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பெண் ஐ.பி.எஸ் அதிகாரியிடம் தவறாக நடக்க முயன்றதாக சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ்தாஸ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ராஜேஸ்தாசை கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந் நிலையில் மேலும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்ட எஸ்.பியாக கயல்விழியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமலாக்கப்பிரிவு சிறப்பு டிஜிபி கரன் சின்ஹா காவல் பயிற்சி கல்லூரி சிறப்பு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறப்பு டிஜிபியாக ஷகீல் அக்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக ஜெயந்த் முரளி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
[youtube-feed feed=1]