சென்னை:  பொதுமுடக்க காலக்கட்டத்தில், பொதுமக்களிடம் காவல்துறையினர் மரியாதையை குறைவாக  நடந்துகொள்ளக்கூடாது என டிஜிபி திரிபாதி அறிவுரை கூறியுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக தமிழக்தில் நாளை முதல் 24ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.  இதையடுத்து, , காவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி அறிவுரை வழங்கி உள்ளார். அதில்,   பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கோபமாகவோ, மரியாதையை குறைவாகவோ மக்களிடம்  நடந்துகொள்ளக்கூடாது. மார்க்கெட் போன்ற இடங்களில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை ஒலிபெருக்கி பயன்படுத்தி தவிர்க்க வேண்டும். தடியடி நடத்தி அல்லது பலப்பிரயோகம் செய்து கூட்டத்தை கலைப்பது போன்ற செயல்களில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது என தெரிவித்துள்ளார்.