திருச்சி: திருச்சி உள்பட 9 மாவட்ட காவலர்களிடம்டிஜிபி சைலேந்திர பாபு இன்று குறைகளை கேட்டறிந்தார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும், உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் துறை அதிகாரிகள் குறைகளை கேட்க பணிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, காவலர்களின் நலன்காக்க மாவட்ட, மண்டல அளவில் குறைகள் காவல்துறை டிஜிபியால் கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் பணியாற்றிவரும் காவலர்களுக்கான குறைதீர்ப்பு கூட்டம் திருச்சி ஆயுதபடை மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலந்துகொண்டு, தங்களது குறைகளை டிஜிபியிடம் கூறி, மனு கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், மத்திய மண்டல காவல்துறை துணைத்தலைவர் சரவண சுந்தர் ஆகியோர் பங்கேற்றனர்.