பரிமலை

ரும் 28 ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்படும் போது கொரோனா அச்சுறுத்தலால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 28 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.   மாசி மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்ட போது பக்தர்கள் வர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.  சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.   மலையில் மற்றும் பம்பையில் தங்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.  இதனால் அப்போது கோவில் வெறிச்சோடியது.

இந்நிலையில் கேரள மாநிலம் கேரள தேவசம் போர்ட் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், ”சபரிமலை ஸ்ரீஐயப்பன் கோயில் நடை வரும் 28 ஆம் தேதி திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.  அப்போது பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

அதுமட்டுமின்றி ஏப்ரல் 7 ஆம் தேதி பம்பை நதிக்கரையில் நடக்கும் ஸ்ரீஆராட்டு விழா சடங்கிலும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது

28 ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, அதற்கு அடுத்த நாள் திரு உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கும். கொரோனா முன்னெச்சரிக்கையாகப் பக்தர்கள் யாரும் சன்னிதானத்திற்கு வரவேண்டாம்

கேரளாவில் சபரிமலை கோவில் இருக்கும் பத்தனம் திட்டா மாவட்டத்தில் ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.