நீண்ட வார இறுதி விடுமுறை காரணமாக திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

ஞாயிறன்று காலை 7 மணி நிலவரப்படி பக்தர்கள் (இலவச) சாமி தரிசனத்திற்காக 18 மணி நேரம் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ததாகவும் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக இந்த நிலை நீடிப்பதாகவும் கூறப்படுகிறது.

நேற்று சனிக்கிழமை ஒரே நாளில் 78,821 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாகவும், 33,568 பேர் மொட்டை அடித்துக் கொண்டதாகவும் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், நேற்று ஒரே நாளில் தேவஸ்தான உண்டியலில் ரூ. 3.36 கோடி காணிக்கையாக விழுந்ததாகவும் இதிலிருந்தே பக்தர்கள் கூட்டம் எதளவுக்கு அலைமோதுகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.