சிதம்பரம்: அறநிலையத்துறையினரின் நடவடிக்கையைத் தொடர்ந்து, சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீதேறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
முன்னதாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் அனுமதி மறுக்கும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், முக்கிய விஐபிக்கள் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய அனுமதி வழங்ககப்பட்டு வந்தது. இது பிரச்சினையைனதைத் தொடர்ந்து, சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி தந்து கடந்த மே மாதம் தமிழகஅரசு அரசாணை வெளியிட்டது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று நடராஜரான சபாநாயகரை தரிசிக்க அனுமதி தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பக்தர்கள் கனகசபை மீது ஏறி நடராஜரை தரிசித்து வந்தனர். ஆனால், தீட்சிதர்கள் மீண்டும் பக்தர்களை அனுமதிக்க மறுப்பதாக புகார்கள் எழுந்தன. முன்னாள் வங்கி மேலாளர் ஒருவருக்கு கனகசபை மேடை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, சிதம்பரம் கோயில் கனக சபை மீது நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதில் இடையூறு, ஏற்படாத வண்ணம் கண்காணிக்க சிறப்பு அலுவலர்களை இந்து அறநிலையத்துறை நியமனம் செய்துள்ளது. இதையடுத்து இன்றுமுதல் மீண்டும் பக்தர்கள் கனகசபை மீது ஏறி நின்று நடராஜனை தரிசித்து வருகின்றனர்.