வேளாங்கண்ணி:
பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல வருடாந்திர திருவிழாவில் பங்கேற்கப் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனக் காவல் ஆணையர் அறிவித்துள்ளார்.

புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் வேளாங்கண்ணி மாதா திருத்தலத்தில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 48வது ஆண்டு பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாகப் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வசதிக்காக ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை நிகழ்ச்சிகள் அனைத்தும் மாதா தொலைக்காட்சி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் பங்குத்தந்தை வின்செண்ட் சின்னதுரை அறிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel