சென்னை:
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதமாக கோவில்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கிராமப்புறக் கோவில்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
3மாதத்திற்கு பிறகு இன்றுமுதல் கிராமப்புற கோவில்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி பல்வேறு கட்டுப்பாடுகளையும் அறிவித்து உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு 6-ம் கட்டமாக பல்வேறு தளர்வுகளுடன் ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் ஆண்டுக்கு 10,000 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வருமானம் உள்ள கிராமப்புற கோயில்களில் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மூன்று மாதங்களுக்கு பிறகு கிராமப்புற தேவாலயங்கள் மற்றும் மசூதிகளிலும் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து, கோவில்களில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முககவசம் அணிய வேண்டும். அடிக்கடி தரைத்தளம் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் ஆகிய பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுள்ளது.