திருவனந்தபுரம்

ரும் 17 ஆம் தேதி முதல் 5 நாட்கள் சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இன்று 17,681 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 44,24,046 பேர் பாதிக்கப்பட்டு அதில் 22,987 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 42,09,746 பேர் குணம் அடைந்து தற்போது 1,90,790 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதையொட்டி கேரளாவில் கொரோனா கட்டுப்பாடு விதிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் மாத பூஜைக்காகத் திறக்கப்பட உள்ளது.  அப்போது பக்தர்களுக்குக் கட்டுப்பாட்டுடன் செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை 5 நாட்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்வது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.  தினசரி 15000 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும்.  அவர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போட்டிருக்க வேண்டும்.  இல்லை என்றால் 48 மணி நேரத்துக்குள் ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்து நெகடிவ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.