விருதுநகர்

க்தர்கள் 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. பிரதோஷம் மற்றும் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளனர்.

இதன்படி காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கிக் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.  மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளதால் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை.

மேலும் மலைப்பகுதிக்கு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் மலையேறி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து பிரதோஷம் மற்றும் பவுர்ணமி ஆகிய தினங்களில் பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.