வழக்கமான ஹாரர் சினிமாவாகத்தான் இருக்கும் என்ற நினைப்புடம் திரையரங்கிற்குள் நுழைந்தோம். நமக்கு ஆச்சரியம் தமிழ் சினிமாவின் எந்தவித சம்பிரதாயங்களும் இல்லாமல் இருந்தது இத்திரைப்படம். 12 வருடங்கள் கழித்து பிரபு தேவா தமிழ் சினிமாவில் அறிமுகமாகின்றார் என்பதனால் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாக இருந்தது அதை பூர்த்தி செய்துள்ளார் ஏ.எல்.விஜய்.
பிரபு தேவா ஸ்டூடியோஸ் மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்து ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் பிரபு தேவா, தமன்னா, சோனு சூட் மற்றும் பலரின் நடிப்பில் இன்று வெளியாகி பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கும் திரைப்படம் “தேவி”.
தமன்னா தான் கதையில் முக்கியதுவம் ஆனால் பிரபு தேவா தனக்கு கொடுக்கப்பட்ட இடத்தை சரியாக பயன்படுத்தி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
பிரபு தேவா :-
தனது யதார்த்த நடிப்பாலும் அசாதாரணமான நடனத்தாலும் தனது பழைய ரசிகர்களை மட்டும் திரும்பி பார்க்க வைக்காமல், இப்போது உள்ள இளைஞர்களையும் தன் ரசிகர்களாக மாற்ற அவர் எடுத்துள்ள மெனக்கெடலுக்கு பாரட்டுகள்.
தமன்னா :-
பாகுபலி திரைப்படத்தில் தனது யதார்த்த நடிப்பாலும் தனது கம்பீரமான நடிப்பாலும் அனைவரின் கவனத்தை ஈர்தது மட்டும் அல்ல தோழா படத்திலும் வெற்றி பயணத்தை தொடர்ந்து ஹாட்ரிக் படமாக தர்மதுரை அமைந்தது. மேலும் இவரின் யதார்த்த நடிப்பாலும் தனது அழகாலும் இளைஞர்களின் நெஞ்சை அள்ளியவர், இந்த திரைப்படத்தில் நடித்ததை பார்த்தால் நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள கதையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியும் என்பதை இந்த படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி :-
தொன தொனவென பேசியே கூட இருப்பவர்களை டென்ஷனின் உச்சியில் நிறுத்தி படாதபாடாய் படுத்திவிடுகிறார் இவர். இவரிடம் சிக்கி பிரபுதேவா படும் பாடு அய்யோ முய்யோதான். பேயிடம் வாய் கொடுத்து கண்டதை புண்ணாக்கிக் கொள்ளும் காட்சிகளில் தியேட்டர்களில் விசில் சப்தம் பறக்கும் என்பது நிச்சயம்.
ஏ.எல்.விஜய் :-
தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். தேவி படத்தின் கதையாசிரியர் ஹாலிவுட் நடிகரின் அப்பா என்பதாலோ என்னவோ படத்தில் எந்த இடத்திலும் நம்மை போர் அடிக்காமல் ரத்தின சுருக்கமாக நம்மை திரைக்கதையோடு ஒன்றி உறவாட வைத்துவிட்டார். மொத்ததில் இந்த தேவி தமிழ் சினிமாவுக்கு மீண்டும் கிடைத்த ஸ்ரீதேவி என்றுதான் சொல்ல வேண்டும்.
– ஸ்ரீநாத்