நடிகை தேவயானியின் கணவர் இயக்குநர் ராஜகுமாரன், ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த சந்திப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர். அருகில் உள்ள மாத்தூரில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களது விவசாய நிலத்தின் அருகே ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் 2 ஏக்கர் விவசாய நிலத்தை பிளாட்டுகளாக விற்பனை செய்ய விளம்பரம் செய்து வந்தது. இதையறிந்த தேவயானி அந்த நிறுவனத்திடமிருந்து 2 ஏக்கர் நிலத்தையும் வாங்கி அதை விவசாய நிலமாக மாற்றி உள்ளார். அதில் தற்போது செண்டு மல்லி பயிரிட்டுள்ளார்.

நடிகை தேவயானி, பிளாட்டுகளை விவசாய நிலங்களாக மாற்றி சாகுபடி செய்து வருவதை அப்பகுதி விவசாயிகள் பாராட்டி வருகின்றனர்.