அறிவோம் தாவரங்களை – வெண்பூசணிக்கொடி

வெண்பூசணிக்கொடி (White pumpkin).

வட அமெரிக்கா உன் தாயகம்!

மணல் கலந்த களிமண் நிலத்தில் வளரும் கொடித் தாவரம் நீ!

ஆயுர்வேதத்தில் நீ “கூஷ்மாண்டம்.”

தலைவலி, நெஞ்சுவலி,மூச்சிரைப்பு, சிறுநீரகக்கோளாறு,வயிற்று நாடாப்புழுக்கள்,குடற்புண், உடல் எடை குறைப்பு,கண் பார்வை,இரத்த சுத்திகரிப்பு, நுரையீரல் நோய்,வாந்தி, தலைச்சுற்றல் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

சாம்பார்,மோர்க்குழம்பு, கறி, ரசம், அல்வா, சூப், சாறு என எல்லா வகையிலும் பயன்படும் நல்ல காய்க் கொடியே!

அமாவாசை படையலுக்குக் காய் கொடுக்கும் கவின் கொடியே!

சீன மருத்துவத்தில் மஞ்சள் காமாலை,சீதபேதி, இருமலுக்குப்பூ கொடுக்கும் பூங்கொடியே!

ஐந்து பிளவுகளைக் கொண்ட அழகிய இலைக் கொடியே!

உருண்டை வடிவ காய் கொடுக்கும் உன்னத கொடியே!மருந்தாகவும் உணவாகவும் பயன்படும் மகிமை கூடிய!நார்ச்சத்து மிகுந்த நற்கொடியே!

கண் திருஷ்டியைப் போக்கும் வெண்பூசணியே!

ஹெக்டேருக்கு 20.டன் வரை காய் கொடுக்கும் பணப்பயிரே!

80 நாட்களில் பலன் கொடுக்கும் பணப் பயிரே!

இறைவழிபாட்டின் தெய்வீக்கனியே!

ஆண்மை சக்தியை அதிகரிக்கும் விதை கொடியே!

தமிழர்களின் பாரம்பரிய உணவே!

நீவிர் பல்லாண்டு வாழ்க!வளர்க!உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்

நெய்வேலி.

📱9443405050.