சென்னை
தற்போது தமிழகத்தில் தொகுதி வாரியாக கட்சிகள் பெற்றுள்ள வாக்குகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் பெற்ற வாக்குகளின் மொத்த எண்ணிக்கை விவரங்கள் வெளிவந்துள்ளன.
இதில் திமுக கூட்டணி மொத்தம் 2 கோடியே 6 ஆயிரத்து 693 வாக்குகளை பெற்றுள்ளனர். இந்த கூட்டணி மொத்தமுள்ள 39 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.
இரண்டாவதாக அ.தி.மு.க. கூட்டணியினர் 1 கோடியே 55 ஆயிரத்து 124 வாக்குகளை பெற்றுள்ளனர்.
பா.ஜ.க. கூட்டணியினர் மொத்தம் 79 லட்சத்து 44 ஆயிரத்து 700 வாக்குகளை பெற்று மொத்த வாக்குகளின் எண்ணிக்கையில் 3-வது இடம் பிடித்துள்ளனர்.
கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி மொத்தம் 35 லட்சத்து 60 ஆயிரத்து 485 வாக்குகளை பெற்றுள்ளது.