அறிவோம் தாவரங்களை – துளசி
துளசி (Thulsi)
பாரதம் உன் தாயகம்!
திருமால் விரும்பும் திருமாலை நீ!
ஆஞ்சநேயரின் அங்கவஸ்திரம்!
4 அடி வரை வளரும் மிளகாய் இலைத்தளிர்கள்!
சிவதுளசி! பெருந்துளசி! செந்துளசி! கருந்துளசி என பத்து இரண்டு வகை பெற்றாய்!
ஆயுர்வேத மருத்துவத்தின் ஆணிவேர்!
ஆக்ஸிஜனை அள்ளித் தரும் அமுதசுரபி நீ !
கபிலர் கண்ணுக்கு நீ வடவனம்!
பெருமாள் கோயிலில் நந்தவனம் நீ !
துளசி மாடத்தில் சாமி செடி!
தொண்டை வலி தன்னை. அண்டாமல் காத்திடுவாய்!
இருமல், சளியை இல்லாமல் ஆக்கிடுவாய்!
வாய் துர்நாற்றம் வராமல் தடுப்பாய் நீ!
நீரிழிவு நோய்க்கு நிகரில்லா நிவாரணி!
துழாய், துளவம், திவ்யா எனப்பெயர் பெற்றாய்!
பச்சைக் குழந்தைக்கும் பயன்படும் பச்சிலைச் செல்லமே!
உன்னை மெச்ச வார்த்தையில்லை!
மேன்மையுற்று நீ வாழ்க!வளர்க! உயர்க!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)
நெய்வேலி.
☎️9443405050.