திருநாங்கூர் திருமணிமாடக்கோயில்.
திருநாங்கூர் திருமணிமாடக்கோயில். திருமணிமாடக் கோயில் அல்லது மணிமாடக்கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற திருத்தலம்.
கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள நாராயணன் , அளத்தற்கரியான் . தாயார் புண்டரீகவல்லி . அழகிய உப்பரிகைகளுடன் கூடிய மாடங்களைக் கொண்ட வீடுகள் நிறைந்து இங்கு இறைவன் எழுந்தருளியிருக்கின்ற காரணத்தால் ” மாடக்கோயில் ” எனப்பெயர் வந்ததாகக் கூறுவர்.
பத்ரிகாசிரமத்தில் இருக்கும் நாராயணனே அதேபோன்ற அமர்ந்த கோலத்தில் இருப்பதாக நம்பிக்கையாகும். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் இங்கு எழுந்தருளும் திருநாங்கூர் கருடசேவைத் திருவிழா இந்தக் கோயிலின் முன்புதான் நடைபெறுகிறது.
இராமானுஜருக்கு நாராயண மந்திரத்தை உபதேசித்த திருக்கோட்டியூர் நம்பி இங்கு வந்து சென்றுள்ளார் . இக்கோவில் மாடக்கோவில் என்பதற்கேற்ப மிகச்சிறந்த வடிவமைப்புடன் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது. திருமங்கையாழ்வாரால் மட்டும் 12 பாசுரங்களில் இத்தலம் பாடல் பெற்றுள்ளது.