சென்னை; முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இன்று எங்கெல்லாம் நடைபெறுகிறது என்ற விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.

மகளிர் உரிமை தொகை பதிவு உள்பட அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ஜூலை 15ந்தேதி அன்று  சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார். இதையடுத்து,  மாநிலம் முழுவதும் 10ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக மாநிலம் முழுவதும்  3,563 இடங்களில் முகாம்கள் நடைபெறுகின்றன.
சென்​னை​யில் தினசரி 6 இடங்களில் முகாம்கள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில்,  பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:=
  1. மாதவரம் மண்டலம், வார்டு-32, சூரப்பேட்டை சந்திப்பு,  அம்பத்தூர் ரெட்ஹில்ஸ் சாலையில் உள்ள ஶ்ரீவரத மஹால்,
  2. இராயபுரம் மண்டலம், வார்டு-49ல் பழைய வண்ணாரப்பேட்டை, ஜி.ஏ. சாலையில் உள்ள மைனா பார்ட்டி ஹால்,
  3. அம்பத்தூர் மண்டலம், வார்டு-80ல் புதூர், கிழக்கு பானுநகர், ரெட்ஹில்ஸ் சாலை, மல்லிகா மஹால்,
  4. கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-130ல் வடபழனி, 100 அடி சாலையில் உள்ள ஆர்த்தி மஹால்,
  5. பெருங்குடி மண்டலம், வார்டு-184, பஞ்சாயத்து அலுவலகச் சாலையில் உள்ள 184வது வார்டு அலுவலகம்,
  6. சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-192ல் நீலாங்கரை, சுகன்யா திருமண மண்டபம்
ஆகிய 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.
பொது மக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.