அறிவோம் தாவரங்களை – தான்றி மரம்

தான்றி மரம் (Terminalia bellirica)

பாரதம் உன் தாயகம்!

மலைகளில் வளர்ந்திருக்கும் மருந்து மரம் நீ!

கசப்புச் சுவையும் துவர்ப்புச் சுவையும் கொண்ட கனி மரம் நீ!

50 அடிவரை உயரம் வளரும் அழகு மரம் நீ!

அகசம், அக்கம், அராமம், அமுதம், அக்கத்தான், எரிக்கண் பலம்,கந்துகன், சதகம், திரிலிங்கம், பூத வாசகம் எனப் பல்வகைப் பெயர்களில் பரிணமிக்கும் நல்வகை மரம் நீ!

சீதபேதி, கண்பார்வை, புண்கள், மூலம், உடல் எடை குறைப்பு, சளி, வயிற்றுப்போக்கு, அம்மை நோய், பல்நோய்கள், படபடப்பு, ஆஸ்துமா, மூச்சிரைப்பு, மூச்சுத்திணறல், ஆசனவாய் அரிப்பு, கடுப்பு, வெடிப்பு, ரத்த சோகை, முடி உதிர்வு ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

‘….தானிக்காய்க் கொண்டவர்க்கு மேகம் அறும்;…. கண்டவர்க்கு வாதம்போம்கான்’ எனச் சித்தர் போற்றும் சிறப்பு மரம் நீ!

குடுமியான்மலை, மானாமதுரை கோயில்களின் தலமரம் நீ!

தோல் பதனிடல், துணிகளுக்கு வண்ணம் ஏற்றல், படகுகள் & விவசாய மரச்சாமான்கள் செய்யப் பயன்படும் சிறப்பு மரம் நீ!

திரிபாலா மருந்து தயாரிக்கப் பயன்படும் மூலிகை மரமே!

இலை, கொழுந்து,பட்டை, காய், தோல், கொட்டை என எல்லாம் பயன்படும் நல்ல மரமே!

மஞ்சள் நிறப் பூப்பூக்கும் மரமே!

சாம்பல் நிறக் கனி கொடுக்கும் நீண்ட மரமே!

கால்நடைகளுக்கு இலை உணவு தரும் கற்பக மரமே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

நெய்வேலி.

📱9443405050.