அறிவோம் தாவரங்களை – நாவல் மரம்
நாவல் மரம் (Syzygium cumini)
இந்தியா மற்றும் இந்தோனேசியா உன் தாயகம்!
30 மீட்டர் வரை உயரம் வளரும் பழமரம் நீ!
வெப்ப மண்டலத்தில் பசுமையாய் வளரும் நிழல் மரம் நீ !
100 ஆண்டுகள் வரை வாழும் கற்பகமரம் நீ!
கருநாவல், கொடி நாவல்,
சம்பு நாவல், சரிதம், ஆருகதம், நேரேடு, சுரபிபத்தினர் எனப் பல வகையில் விளங்கும் துவர்ப்புப் பழ மரம் நீ!
அருகதம், நாவல், நம்பு, சாட்டுவலம், சாம்பல் என ஐவகைப் பழங்களை நல்கும் அரியமரம்!
திருநாவலூர், திருவானைக்காவல் ஆகிய கோயில்களின் தலமரம் நீ!
கால்நடைகளுக்கு உணவு தரும் இலை மரம் நீ!
சர்க்கரை நோய், சிறுநீர் பெருக்கம், ஆஸ்துமா, தாகம், களைப்பு, குருதி, சீதபேதி,கல்லீரல் கோளாறுகள், குடற்புண், காசநோய், பெரும்பாடு, ஈளைஇருமல், தோல் நோய், வாதம், கரப்பான், குருதிக் கழிச்சல், சுரம், மாந்தம் ஆகியவற்றிற்கு ஏற்ற மூலிகை மரம் நீ!
80 கிலோ வரை பழம் தரும் இனிய மரமே!
பூச்சிகள், பூஞ்சாணங்கள் அண்டாத தனிவகை மரமே!
தெய்வ வழிபாட்டிற்குப் பயன்படும் புனித கனி மரமே!
நீவிர் வையகமும் வானகமும் உள்ளவரை வளமோடும் நலமோடும் வாழியவே!
நன்றி : பேரா.முனைவர். ச. தியாகராஜன்(VST)
நெயவேலி
📱9443405050.