சபரிமலையில் நடக்கும் குருதி பூஜை
சபரிமலையில் நடக்கும் குருதி பூஜை பற்றி முகநூலில் வைரலாகும் ஓர் பதிவு
சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் நலனுக்காக நடத்தப்படும் பூஜை தான் குருதி பூஜை.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடக்கும் பூஜைகளில் முக்கியமானது குருதி ( இரத்தம் ) பூஜை ஆகும்.இந்த பூஜை வருடாவருடம் ஜனவரி 20 ம் தேதி அன்று இரவினில் நடைபெறும்.காடுகளில் நம்மைப் பாதுகாப்பது வனதேவதைகள் ஆகும்.அந்த வனதேவதைகளுக்கு நன்றிக் கடனாகச் செய்வதே இந்த குருதி பூஜை.
அதை எப்படிச் செய்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். சபரிமலை ஐயப்பன் கோயில் அருகே காட்டின் ஒரு பகுதியில் தென்னங்கீற்றால் ஆன வீடு (அம்பலம் ) போன்ற அமைப்பை உருவாக்குவார்கள்.அதில் ஒவ்வொரு தேவதைகளை ஆவாஹிப்பார்கள்.இதைக் காட்டுவாசிகள் அவர்களின் குருவின் துணையோடு செய்வார்கள். இதில் பந்தள மன்னர் குடும்பத்தின் பிரதிநிதி, சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தி, மாளிகைபுரம் மேல்சாந்தி, தந்திரி போன்றோர் கலந்து கொள்வர்.
பூஜை முடிந்த பின்னர் பந்தள பிரதிநிதி பணமுடிப்பை ஒன்றைப் பூஜை நடத்திய குருவிடம் கொடுப்பார்.அதற்கு குரு ஒரு பிரசாதம் தருவார்கள். பின்பு பந்தள பிரதிநிதி, தந்திரி, மேல்சாந்தி அனைவரும் திரும்பி விடுவார்கள். அவர்கள் சென்ற பின் ஒவ்வொரு அம்பலத்தின் முன்பு உள்ள பலிபீடத்தின் மீது பூசனிக்காய் வைத்து பக்கத்தில் சூடம் ஏற்றி பெரிய வாளின் உதவியால் பூசனிகாயையை இரண்டாகப் பிளந்து அதன் மீது பக்கத்தில் ஒரு பாத்திரத்தில் வைத்துள்ள இரத்தம் போன்ற உள்ள திரவத்தை தெளிப்பார்கள். பின் திரவம் இருந்த பாத்திரத்தை தலைகீழாகக் கவிழ்த்து வைத்து விடுவார்கள்.
பின்பு அனைவரும் திரும்பி பார்க்காமல் சென்று விடுவார்கள். இது நமக்காக,ஐயப்ப பக்தர்களின் நலனுக்காக நடத்தபடும் பூஜை.
ஸ்வாமியே சரணம் சரணம் ஐயப்பா