அறிவோம் தாவரங்களை – சர்பகந்தா செடி

சர்பகந்தா செடி. (Rauvolfia Serpentina)

தென்கிழக்கு ஆசியா உன் தாயகம்!

செம்மண் நிலத்தில் வளரும் சிறு செடி நீ!

கி.மு.4.ஆம் நூற்றாண்டு முதல் பயன்பாட்டில் உள்ள  நயன்மிகு செடிநீ!

பாம்புக் கடிக்கு ஏற்ற சரியான வேர்ப்பொடி நீ!      ‘

சரஹசம்ஹிதா’ என்னும் ஆயுர்வேத மருத்துவ நூலில் இடம் பெற்றுள்ள இனிய மூலிகை செடி நீ! 1946 ஆம் ஆண்டிற்குப் பிறகு பிரபலமானசிறப்புச்  செடி  நீ!

இந்தியா,அந்தமான், வங்காள தேசம் .பர்மா, இந்தோனேசியா, இலங்கை நாடுகளில் அதிகமாக வளர்ந்திருக்கும் அழகு செடி நீ!

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மூலிகை ராணி நீ !

சிவன் அமல் பொடி, பாம்புகளா என இருவகை பெயர்களில் விளங்கும் இனிய மருந்து செடி நீ!

துவர்ப்பு, கார்ப்பு, கசப்பு,என கலப்பு சுவை கொண்டு விளங்கும் வியப்பு செடி நீ !

சூரணம், மாத்திரை,  கஷாயம் என பல்வகையில் பயன்படும் நல்வகை செடி நீ!

உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, மன அழுத்தம்,  ரத்த ஓட்டம் சீர்ப்படுதல், மாரடைப்பு, திக்குவாய், மூளைக் கோளாறு, புற்று நோய், முகப்பரு, நரம்பு வியாதி  ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

விதை குச்சி, வேர்,தண்டு,விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் இனிய செடி நீ!

வறட்சியைத் தாங்கி வளரும் புரட்சி செடியே!

சல்லி வேர்கள் மூலம் வளரும் நல்ல செடியே!

 18 மாதங்களில் பலன் கொடுக்கும்  வேர்ச் செடியே!

நீவிர்  பல்லாண்டு வாழ்க!வளர்க!  உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்

நெய்வேலி.

☎️9443405050.