மனக்கவலை தீர்க்கும் மணக்குள விநாயகர்

Must read

🐘💖மனக்கவலை தீர்க்கும் மணக்குள விநாயகர்💖🐘

🎇பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிக் காலத்தில் கி.பி.1688ல் தங்களுக்காகக் கோட்டை ஒன்று கட்டினர். இக்கோட்டைக்குப் பின்புறம் அமைந்திருந்த கோவிலே மணக்குள விநாயகர் திருக்கோவில்.

🎇இத்திருத்தலத்தின் மேலண்டைப் பகுதியில் ஒரு குளம் இருந்ததாகவும்,அது கடற்கரைக்கு அருகில் இருந்ததால் அவ்விடத்தில் மணல் அதிகமாக வந்ததாகவும்,ஆகவே அக்குளத்திற்கு மணற்குளம் என்று பெயர் வந்ததாகவும் உறுதியாகச் சான்றுகளுடன் கூறுவர்.

🎇புதுச் சேரியைப் பற்றி அறியக் கிடக்கின்ற பல தரப்பட்ட வரலாற்றுச் செய்திகள் இந்த உண்மையை வலியுறுத்துகின்றன.இந்த மணற்குளத்தின் கீழ்க் கரையில் தான் விநாயகர் ஆலயம் எழுப்பப் பட்டிருக்கின்றது.இதன் காரணமாக இந்த ஆலயத்திற்கு மணற்குள விநாயகர் ஆலயம் என்ற பெயர் பிரபலமாயிற்று.

🍃சிறப்புகள்🍃

🌲விநாயகர் தலங்களில் வேறு ஏங்குமே இல்லாத சிறப்பாகப் பள்ளியறை இங்கு உள்ளது.  இங்குப் பள்ளியறையில் விநாயகரோடு உடன் இருப்பது அவரது தாயார் சக்தி தேவியார் ஆவார்.  தினமும் நைவேத்தியம் முடிந்தவுடன் விநாயகர் பள்ளியறைக்குச் செல்வார்.  இதன் அடையாளமாகப் பாதம் மட்டுமே இருக்கும் உற்சவ விக்ரகம் கொண்டு செல்லப்படுகிறது.

🌲தற்போது மூலவரான மணக்குளத்து விநாயகர் இருக்கும் பீடம் இருப்பதே நீர் நிலை அமைந்துள்ள ஒரு கிணறு அல்லது குளத்தின் மீது தான் என்பது இத்தலத்தை நன்கு அறிந்த பலருக்கும் தெரியாத செய்தி.

🌲பீடத்தின் இடப்பக்கம் மூலவருக்கு மிக அருகில் அரை அடி விட்டத்தில் ஒரு ஆழமான குழி செல்லுகிறது.அதில் தீர்த்தம் உள்ளது.இதன் ஆழம் கண்டு பிடிக்க முடியவில்லை.இதில் வற்றாத நீர் எப்போதும் உள்ளது.இது முன்காலத்தில் இருந்த குளமாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள்.

🌲விநாயகர் சதுர்த்தி இத்தலத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும்.அது தவிர ஜனவரி முதல் தேதி அன்று தான் இத்தலத்தின் பிரமாண்டமான அளவில் பக்தர் கூடுவார்கள்.

🌲அகில இந்திய அளவில் விநாயகருக்குக் கோபுரம் முழுக்கவே தங்கத்தால் வேயப்பட்ட கோவில் இக் கோவில் மட்டுமே.

🌲உற்சவர் வில் புருவமும் மூன்று பதமாகவும் நிற்கிறார்.  வேறு ஏங்குமே பார்த்திராத முடியாத சிறப்பு இது.

🌲விநாயகருக்கு இத் தலத்தில் மட்டும் தான் திருக்கல்யாணம் நடக்கிறது.  இங்கு சித்தி,புத்தி அம்மைகள் மனைவியாக உள்ளனர்.

🌲சிவ தலங்களில் இருக்கும் நடராஜரைப் போல்,நர்த்தன விநாயகர் இங்கு இருக்கிறார்.   விநாயகர் தலங்களில் பள்ளியறை இருப்பது இங்கு மட்டுமே.

More articles

Latest article