அறிவோம் தாவரங்களை – பிளம் மரம்

பிளம் மரம். (Prunus salicina)

ஈரான் உன் தாயகம்!

ஆதிமனிதர்கள் வளர்த்த முதல் பழ மரங்களில் நீயும் ஒன்று!

உன் உலர்ந்த கனியே!‘ஆல்பக்கோடா!.’

ஆப்பிள், திராட்சை, அத்தி மரத் தாவரங்கள் உன் உடன்பிறப்புகள்!

புளிப்புச் சுவையும் இனிப்புச் சுவையும் கொண்ட புனித மரம் நீ!

2000 வகைகளில் எங்கும் காணப்படும் இனிய மரம் நீ!

10 மீட்டர் வரை உயரம் வளரும் பசுமை மரம் நீ!

சிவப்பு, ஊதா, மஞ்சள், நிற பழங்கள் தரும் மகிமை மரம் நீ !

சீனா, ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் அதிகம் காணப்படும் அற்புதமரம் நீ!

வாந்தி, அஜீரணம், மலச் சிக்கல்,கொழுப்புகுறைவு, எலும்பு வலிமை, புற்றுநோய், காய்ச்சல், வயிற்றுப் புண், கண் பார்வை, இதயநலம், பதட்டம், தலைமுடி உதிர்வு, எடை குறைவு, சிறுநீரகக் கோளாறு, தழும்புகள் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

ஜாம், ஜெல்லி,ஒயின், பிராந்தி தயாரிக்க பயன்படும் பழமரமே!

நார்ச்சத்து மிக்க நயன்மிகு மரமே!

உலகில் ஆண்டிற்கு 12.1 மில்லியன் டன் பழம் தரும் கற்பக மரமே!

அழகும் கவர்ச்சியும் கொண்ட அற்புத மரமே!

நீவிர் பல்லாண்டு பயன்தந்து வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர். : ச.தியாகராஜன்(VST)நெய்வேலி

📱9443405050.