அறிவோம் தாவரங்களை – சீதா மரம்

சீதா மரம் (Annona squamosa)

அமெரிக்கா உன் தாயகம்!

பாரதத்தில் உன் இன்னொரு பெயர் ‘கூந்தல் தைலம்’!

8 மீ வரை உயரம் வளரும் அனோனா இனத் தாவரம் நீ!

தைவானில் நீ ‘புத்தர் தலை’!

இலங்கையில் நீ ‘அன்னமுன்னா’!

சளி, இருமல், மார்புவலி, நாசித் தொற்று சுவாச வீக்கம், கல்லீரல் கோளாறு, இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சோகை, ஆஸ்துமா, வயிற்றுப் போக்கு, காய்ச்சல், குடல்புண், ஈரல் பாதிப்பு, தோல் நோய்கள், நரம்புத் தளர்ச்சி, நடுக்கம், இருதயக் கோளாறு, சிறுநீர்க் கோளாறு ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

எண்ணெய் மற்றும் ஷாம்பு தயாரிக்க விதை தரும் மரம் நீ!

தேநீர் தயாரிக்கப் பயன்படும் இலை மரமே!

புற்று நோயை நீக்கும் முள் சீதா பழ மரமே!

அதிகக் கலோரிகள் கொண்ட அழகு பழ மரமே!

வெப்ப மண்டலங்களில் அதிகம் வளரும் இனிய பழ மரமே!

பேன்,பொடுகுகளை நீக்கப் பயன்படும் விதை எண்ணெய் மரமே!

ஏக்கருக்கு 5  லட்சம் வரை பலன் தரும் பணப்பயிர் மரமே!

உடல் புத்துணர்ச்சிக்கு ஏற்ற உன்னதப் பழ மரமே!

நீவிர் விண்ணும் மண்ணும் உள்ளவரை வளமும் நலமும் பெற்று வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

நெய்வேலி

📱9443405050.