அறிவோம் தாவரங்களை – ஆனைக்கொய்யா

ஆனைக்கொய்யா. (Persea americana)

அமெரிக்கா, மெக்ஸிகோ உன் தாயகம்!

இலவங்கம், கற்பூரம், புன்னை மரம் உன் உடன் பிறப்பு மரங்கள்!

வெண்ணெய்ப் பழம், அவகோடா, வெண்ணெய்ப் பேரி, முதலைப்பேரி எனப் பல்வகைப் பெயர்களில் பரிணமிக்கும் ஒரு பொருள் குறித்த பல சொல் கிளவி நீ!

இந்தோனேஷியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளில் அதிகமாகக் காணப்படும் பயன்மிகு மரம் நீ!

20 மீட்டர் வரை உயரம் வளரும் இனிய மரம் நீ!

இதய நலம், கண் பார்வை, ஆண்மை சக்தி அதிகரிப்பு, புற்றுநோய், சிறுநீரகப் புண், சொறி சிரங்கு, வாய் துர்நாற்றம், சர்க்கரை நோய், வாந்தி, கர்ப்பிணிகளின் வாந்தி & மயக்கம், வாத நோய், தோல் நோய்கள் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

சப்பாத்தி தயாரிக்கப் பயன்படும் வெண்ணெய்ப் பழமரமே!

கால்நடைகளுக்கு இலை, பட்டை, பழம், விதை, உணவு வழங்கும் வள்ளல் மரமே!

ஆண்டுக்குச் சுமார் 120  கனிகள் தரும் அற்புத மரமே!

முட்டை வடிவக் கனியைத் தரும் முதன்மைப் பழமே!

சைவ உணவாகக் கருதப்படும் சத்துப் பழ மரமே!

வீடுகளில் வளர்க்கப்படும் அலங்கார மரமே!

எட்டு மாதத்தில் காய் தரும் இனிய மரமே!

ஆண்டிற்கு 300 காய்கள் தரும் அற்புத மரமே!

நார்ச்சத்து கொண்ட நற்கனி மரமே!

விளையாட்டு வீரர்களின் ஊக்க மருந்தாய்ப் பயன்படும் உன்னத மரமே!

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அழகு மரமே!

நீவிர் நீடூழி வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

நெய்வேலி

📱9443405050.