அறிவோம் தாவரங்களை – கம்பு

கம்பு.(Pennisetum glaucum)

ஆப்பிரிக்கா உன் தாயகம்!

இந்தியாவில் அதிகம் பயிரிடப்படும் இனிய தானியம் நீ!

6 மாதம் வரை கெடாமல் இருக்கும் உணவு தானியப் பயிர் நீ !

40க்கும் மேற்பட்ட நாடுகளில் உணவாகப் பயிரிடப்படும் உன்னதப் பயிர் நீ!

கூழ் ,களி ,அடை, தோசை, முளை விட்ட பயிறு எனப் பல வகையில் பயன்படும் நல்வகைத் தானியம் நீ!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்தடைந்த இனிய தானியம் நீ!

வயிற்றுப் புண், வாய்ப் புண், உடல் உஷ்ணம், உடல் சோர்வு, கண் நோய், இதய நலம், சிறுநீர்ப் பெருக்கம், இளநரை, தாதுவிருத்தி, ரத்த சோகை, உடல் எடை குறைப்பு, புற்று நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ,மாதவிடாய், எலும்பு வலிமை ஆகியவற்றுக்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

சங்க இலக்கியம் போற்றும் சரித்திரத் தானியப் பயிர் நீ!

சித்த மருத்துவத்தில் பயன்படும் சிறப்புப் பயிர் நீ!

அரிசியை விட 8 மடங்கு அதிக இரும்புச் சத்து இருக்கும் இனிய தானியப் பயிர் நீ!

வறட்சியைத் தாங்கி வளரும் புரட்சி தானியமே!

உடனடி உணவுக் கலவையின் உன்னத உணவுப் பயிரே!

கோடைக்காலத்தில் குளிர்ச்சி உணவுப் பயிரே!

உறக்கத்தைக் கொடுக்கும் உன்னத உணவுப்பயிரே!

புன்செய் நிலப் புனிதப் பயிரே!

பாரதத்தின் பாரம்பரிய உணவே!

கால்நடைகளின் தீவனமே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர்.

ச.தியாகராஜன்(VST)

நெய்வேலி.

📱9443405050.