அறிவோம் தாவரங்களை – பனை மரம்
பனை (Palmyra Palm)
தமிழ்நாட்டின் தேசிய மரம்!
பண்டையத் தமிழர்களின் பண்பாட்டுக் குறிப்புகளை ஓலைகளில் தாங்கி நின்ற வரலாற்றின் அடையாளம்!
இலங்கை முதல் சீனா வரை எங்கும் இருக்கும் கருப்பட்டி மரம்!
வெப்பம் தணிக்க நுங்கு!
குடிசை வீடு கட்ட ஓலை மற்றும் வாரை!
வியர்வைக்கு ஏற்ற பதநீர்! புழுக்கத்தைப் போக்க விசிறி!
வேலி கட்ட நார்கள்!
குருவி, பறவைகள் கூடு கட்ட மட்டை என வாரி வழங்கும் கற்பகத்தரு!
சீதபேதிக்குச் சிறந்த நிவாரணி!
அம்மை நோய் தீர்க்கும் அற்புத மருந்து!
40 மீட்டர் வரை உயரம் வளரும் நெட்டை மரம்!
ஆண்பனை, பெண் பனை, ஈச்சம் பனை, ஈழப்பனை என 34.வகை பெற்றாய்!
ஆண்டுக்கு 150 லி. பதநீர், 24 கி.கி வெல்லம் தரும் நல்ல மரம்!
₹ 250 கோடி அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் பணமரம்நீ!
பூக்கும் தாவரமே!
ஏழைகளைக் காக்கும் பேரினமே!
நல்லோர் வாக்கும் வார்த்தையும் போல் நீவிர் வாழிய! வாழியவே!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)
நெய்வேலி.
☎️9443405050.