அறிவோம் தாவரங்களை – ஆலிவ் மரம்

ஆலிவ் மரம் (Olea Europaea)

நடு நிலக் கடல், கிரேக்கம் உன் தாயகம்!

கிமு. 3000இல் மெசபடோமியாவில் வளர்ந்த பயன்மிகு மரம் நீ!

கிரேக்கம், ரோமானிய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பழமை மரம் நீ !

15 மீ.வரை உயரம் வளரும் பசுமை மரம் நீ!

உன் இலைகள் சமாதான சின்னம்!

நினைவாற்றல், மார்பகப் புற்றுநோய் ,நீரிழிவு, மன அழுத்தம், கல்லீரல் நலம், தலைமுடி வளர்ச்சி, எடை குறைப்பு, அஜீரணம், எலும்பு வலிவு, கொழுப்பு குறைப்பு, புற்று நோய், முகப் பரு, தலை முடி வளர்ச்சி ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

இத்தாலி, கிரேக்கம், போர்ச்சுகல், இஸ்லாமிய நாடுகளில் அதிகமாய் பயன்படும் எண்ணெய் மரம் நீ!

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பலன் தரும் அற்புத மரம் நீ !

இஸ்ரேல் மக்களின் விளக்கு எண்ணெய்  மரம் நீ!

ஊறுகாய், வாசனைப் பொருள்கள், சவர்க்காரம் ,கம்பளி பதப்படுத்துதல், தின்பண்டங்கள் செய்யப் பயன்படும் கனிமரம் நீ!

பண்டைய ஒலிம்பிக் வெற்றி வீரர்களின் இலை கிரீடம்  நீ!

சமையலுக்கு உகந்த எண்ணெய் மரமே!

கருப்பு நிற கனி கொடுக்கும் கவின் மரமே!

ஒட்டு முறை, பதியன் முறைகளில் பயிரிடப்படும் பயன் மரமே!

மான்டனிக்ரோநாட்டின் இயேசுவிற்கு முன் தோன்றி (2,224 ஆண்டுகள்) இன்னமும் இருக்கும் உன்னத மரமே!

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் கற்பக மரமே!

ஜெருசேலம் மலையை மூடிமறைக்கும் ஒலிவ மரமே!

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான ‘கெத்சமனே’ தோட்ட அழகு உயிர் மரமே!

தொட்டிகளில் வளர்க்கப்படும் வேளாண் மரமே!

திரவத் தங்கமே!

 நீவிர் பல்லாண்டு வாழ்க!வளர்க!உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்

நெய்வேலி.

☎️ 9443405050