அறிவோம் தாவரங்களை – செர்ரி பழச்செடி

Must read

அறிவோம் தாவரங்களை – செர்ரி பழச்செடி

செர்ரி பழச்செடி.(Muntingia calabura).

 

மெக்ஸிகோ உன் தாயகம்!

குளிர்ந்த பிரதேசத்தில் அதிகமாக விளையும் சிறந்த பழச்செடி நீ!

சேலாப்பழம், தேன் பழம் ,ஜேம் பழம் என பல்வேறு பெயர்களில் பரிணமிக்கும்  நல்வகை பழச்செடி நீ!

அமெரிக்கா, ரஷ்யா,பெரு போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும் அற்புத கனிச்செடி!

பிணிகள் அண்டாத சஞ்சீவிச்செடி நீ!

நரம்புக் கோளாறு, மன அழுத்தம் ,தூக்கமின்மை , தோல் மினுமினுப்பு ,கண் பார்வை,மலச் சிக்கல், தலைமுடி உதிர்வு, ரத்த ஓட்ட சீர்மை, வயிறு நலம், அஜீரணம், புற்றுநோய் , உடல் எடை குறைப்பு ,மூளை செயல்பாடு ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

ரசம், ஜாம், ஜெல்லி ,ஜூஸ் ,ஸ்வீட் பப்ஸ் செய்யப் பயன்படும் நல்வகை பழச்செடி நீ!

விட்டமின் ‘சி’ சத்து நிறைந்த முத்துச்செடி நீ!

7 மாதத்தில் பலன் தரும் பலன் தரும் இனிய செடியே!

ஆப்பிள் வடிவ பழம் கொடுக்கும் அழகு செடியே!

வாரம் இரண்டு கூடை பழம் தரும்  வண்ணச் செடியே!

நீவிர் பல்லாண்டு வாழ்க!வளர்க! உயர்க!

நன்றி :  பேரா. முனைவர். ச.தியாகராஜன்

நெய்வேலி.

📞9443405050.

More articles

Latest article