அறிவோம் தாவரங்களை – காடைக்கண்ணி 

Must read

அறிவோம் தாவரங்களை – காடைக்கண்ணி

காடைக்கண்ணி.(Avena sativa).

ஐரோப்பா  உன் தாயகம்!

தமிழ்நாட்டில் நீ ‘புல்லரிசி’ !

வெண்கல காலத்தில் தோன்றிய தொன்மை பயிர் நீ!

வெப்ப மண்டலத்தில் நன்றாக வளரும் தானிய பயிர் நீ !

உருசியா,கனடா ,போலந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் அதிகமாக விளையும் அழகு பயிர் நீ!

ஸ்காட்லாந்தின் முதன்மை தானிய உணவுப்பயிர் நீ!

ஓட்ஸ்,  கஞ்சி, கூழ், மெத்தப்பம், ஈரட்டி, எனப் பல்வகையில் பயன்படும் நல்வகைத் தானியப் பயிரே!

குருதிக் கொழுப்புக் குறைப்பு, இதய நலம் ,உடல் எடை குறைப்பு,மார்பகப்புற்றுநோய் உடல் நலம், மன அழுத்தம், தோல் நோய்கள் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ !

60 நாட்களில் அறுவடைக்குத் தயாராகும் அழகுப் பயிரே!

புரதச்சத்து மிகுந்த தானிய பயிரே!

கால்நடைகளின் தீவனமே!

பூச்சிகள் அண்டாத புனிதப்பயிரே!

நீவிர் பல்லாண்டு வாழ்க !வளர்க !உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்

நெய்வேலி.

📱9443405050.

More articles

Latest article