அறிவோம் தாவரங்களை – புதினா
புதினா.(Mentha spicata)
கிரேக்கம் உன் தாயகம்!
2000.ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மூலிகைச்செடி, 20 செ.மீ.உயரம் வளரும் சிறு செடி!
ஆசியா,ஐரோப்பா,இலங்கை ஆகிய நாடுகளில் வளரும் கீரைச்செடி!
2010 இல் உலக மருத்துவ இதழின் ஆய்வுக் குறிப்புப்படி ஒற்றைத் தலைவலி, வாந்தி, ஒலி, ஒளி உணர்திறனுக்கு ஏற்ற மருத்துவ நிவாரணி நீ!
வயிற்றுவலி, வயிற்றுப்புழு, வாயுத் தொல்லை, தலைவலி, நரம்பு வலி, வாத வலி, ஆஸ்துமா, தலைப்பொடுகு, அஜீரணம் இவைகளுக்கு ஏற்ற கீரைச்செடி!
மனஅழுத்தத்தை மாற்றும் எண்ணெய்ச் செடியே!
ஏழைகளை வாழ்விக்கும் தழைச்செடியே!
பிரியாணி சுவையைக் கூட்டி சுண்டி இழுக்கவைக்கும் தண்டுச்செடியே!
மதிய உணவை மணக்க செய்யும் புதினா தொக்குச் செடியே!
வறுமையாளனின் பழைய சோற்றுக்கு அருமையான துவையல் கொடுக்கும் குறுமை செடியே!
ஆம்பல் மலர் போல் குவிந்து கிடக்கும் சோம்பலை விரட்டும் தேநீர்ச் செடியே!
ஆசையாய் உண்ணும் தோசை இட்லிக்கு சட்டினி கொடுக்கும் குட்டிச் செடியே!
மல்லிச்செடியின் உறவுச் செடியே!
நீவிர் மலரும் மணமும் உள்ளவரை தினமும் வளர்ந்து வாழியவே!
நன்றி : Prof. Dr. S. Thiyagarajan
Neyveli Township
📱9443405050.