அறிவோம் தாவரங்களை – சூபா புல் மரம்

சூபா புல் மரம்.(Leucaena leucocephala)

மெக்ஸிகோ உன் தாயகம்!

இபில்-இபில், கூபாபுல், சவுண்டேல் மரம்   எனப் பல்வேறு பெயர்களில் விளங்கும் நல்வகை மரம் நீ!

வியட்நாம்  மக்களின் தெய்வீக மரம் நீ!

3 ஆண்டுகளில் 20.அடி உயரம் வளரும் இனியமரம் நீ!

பழமரத் தோப்புகளின் காற்று தடுப்பான் நீ!

மரங்களில் சகலகலா வல்லவன் நீ!

கால்நடைகளின் தீவனம் நீ!

ஸ்வீடன், அமெரிக்கா, பின்லாந்து நாடுகளில் மின்சாரம் தயாரிக்க பயன்படும் மேன்மை மிகு மரம் நீ!

மண் அரிப்பைத் தடுக்கும் காவலன் நீ!

55  ஆண்டுகள் வரை வாழும் அரிய மரம் நீ!

காய்,  விதை, கொழுந்து   என எல்லாம் பயன்படும் நல்ல மரம் நீ!

விறகு,நார்,காகித உற்பத்தி,  ரேயான் துணிகள்,  ஒட்டுப் பலகை செய்யப் பயன்படும் நயன்மிகு மரம் நீ!

ஆண்டுக்கு 15 கி.கி. தீவனம் தரும் அழகு மரமே!

கோழிகளின் தீவனமே!

பால் உற்பத்தி பெருக  உதவும்  பசுந்தழை மரமே!

தீவன வங்கிகளுக்கு இலை தரும் வள்ளல் மரமே!

வெண்பந்து போன்ற பூப்பூக்கும் பொன் மரமே!

ஹெக்டேருக்கு 100 டன் வரை பசுந்தீவனம்  தரும்  பசுமை மரமே!

வறட்சியைத் தாங்கி வளரும் புரட்சி மரமே!

தீவன மரங்களின் ராஜாவே!

பயிர்செய் நிலத்தின் உயிர் தரும் உரமே!

நீவிர் பல்லாண்டு வாழ்க!வளர்க! உயர்க!

நன்றி  : பேரா.முனைவர். ச.தியாகராஜன்

நெய்வேலி.

📱9443505050.