டில்லி

மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பத்திரிகையாளர்களின் சந்திப்பில் தாங்கள் தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தின் நகலை வழங்கினர்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வரர், ரஞ்சன் கொகோய், குரியன் ஜோசப், மதன் லோகூர் ஆகிய நால்வர் இந்திய வரலாற்றில் முதல் முறையாக செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர்.  அப்போது  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தன்னிச்சையாக செயல்படுவதாகவும் அவரை நீக்குவது பற்றி மக்கள் முடிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.   அத்துடன் தாங்கள் தலைமை நீதிபதிக்கு அனுப்பியதாக கடிதம் ஒன்றின் நகலை அளித்தனர்.

அந்த கடிதத்தில், “உச்ச நீதிமன்றத்தில் நிர்வாகம் சரியாக இல்லை.   நாங்கள் இதுகுறித்து நேரில் சந்தித்து தெரிவித்தும் எந்தப் பயனும் இல்லை.  அதனால் இந்த கடிதத்தை எழுதுகிறோம்.

உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகத்தில் குளறுபடிகள் உள்ளன.   இப்போதே அவற்றை சரி செய்யாவிடில் இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பின் வரும் தலைமுறை நம்மைப் பார்த்து சிரிக்கும் நிலை உண்டாகும்.

உச்சநீதிமன்றத்தின் மாண்பு ஏற்கனவே அழிந்துக் கொண்டு வருகிறது.   இப்போதே தலைமை நீதிபதி நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.  அப்படி இல்லை எனில் உச்சநீதிமன்றம் தனது மாண்பை முழுமையாக இழந்துவிடும்” எனக் குறிப்பிடப் பட்டுள்ளது