காஞ்சிபுரம்

நகரங்களில் உயர்ந்தது காஞ்சி

மலர்களில் உயர்ந்தது ஜாதிமல்லி

கோவில் நகரம் என்று போற்றப்படும் உன்னதமான நகரம் காஞ்சி..

காமனை பழித்த கண்களைக் கொண்டதால் காமாட்சி

பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோயில்.

ஏகாம்பரேஸ்வரர் கோயில் வரதராஜ பெருமாள் கோயில் என சைவம் வைணவம் சாக்தம் மூன்று சமயங்களும் தழைத்தோங்கும் நகரம் காஞ்சி.

நகரே திரிகோணமாகவும் ஸ்ரீசக்ராதாரமாகவும் தான் அமைந்து இருக்கும்.

அதன் மத்தியில் பிந்து ஸ்தானமாக இருந்து ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் வரதராஜ பெருமாள் ஆகிய இரு பெரும் தெய்வங்களும் உற்சவ காலத்தில்  அன்னை  காமாட்சியை வலம் வந்து தான் செல்கிறார்கள்…

அம்பிகையின் இடுப்பு விழுந்த இடம் 51 சக்தி பீடங்களில் காமகோடி பீடம் ஆகும்.

அமர்ந்த நிலையில் இரண்டு கால்களையும் மடித்து கரும்பு வில்லும் பாசாங்குசமும் கொண்டு ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியாக ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரியாக அமர்ந்து அருள் பாலிக்கிறாள் அன்னை காமாட்சி.

அனைத்து சக்தி பீடங்களுக்கும் இங்கிருந்து தான் சக்தி செல்கிறது..

ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரம் அமைத்தும் காஞ்சி மகாசுவாமிகளின் பாதம் பட்டதால் காஞ்சியும் காசியே..

காஞ்சியில் உள்ள எந்த சிவன் ஆலயத்திலும் அம்பிகைக்கு தனி சன்னதி இல்லை காமாட்சி ஒருத்தியே இங்கு பிரதானம்.