அறிவோம் தாவரங்களை – பலா

பலா (Jack fruit)

பக்கமெல்லாம் முள்ளிருக்கும்; பானை போல் வயிறு இருக்கும்; பச்சைக்கிளி நிறம் இருக்கும்; தேன் போன்ற சுவையிருக்கும் பலா.

வானம் பார்த்த பூமியை வளமாக்கும் பணப்பயிர் நீ!

பண்ருட்டி மக்களின் பசி போக்கும் உயிர்ப்பயிர் !

வேர்ப்பலா,வழுக்கை பலா, ஆசினிப்பலா, கூழைப்பலா எனப் பலப்பல  பேர் பெற்று கனி  தரும் இனிய பலா!

வாயுத் தொல்லைக்கு வாய்த்த நல் மருந்தானாய்!

புற்று நோய், ஆஸ்துமாவை புறந்தள்ளும் தன்வந்திரி!

பல்வலி, நீர்க்கடுப்பைப் பக்குவமாய் வெளியேற்றும் தக்கதோர் வலிநீக்கி!

சுவைகளில் முதல்வனே!

பழங்களின் அரசனே!

முக்கனியின் இடைக கனியே!

முத்தமிழ் போல் நீ வாழ்க!வளர்க!உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

நெய்வேலி.

📱9443405050.