சிட்னி
ஐசிசி கடந்த 10 ஆண்டுகளுக்கான சிறந்த ஆண்கள் டெஸ்ட் அணி விருதுகள் அறிவிக்கப்பட்டு இதில் இந்திய அணித் தலைவர் கோலி இடம் பெற்றுள்ளார்.
ஐசிசி விருதுகள் ஒவ்வொரு வருடமும் அறிவிக்கப்படுவது வழக்கமாகும். இப்போது மொத்தமாக கடந்த 10 வருடங்களில் சாதனை புரிந்த வீரர்களுக்கான விருது பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் மக்களின் வாக்கெடுப்பு அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதில் கடந்த 10 ஆண்டுகளுக்கான டெஸ்ட் அணி விருதுகளில் 2 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில் டெஸ்ட் அணியின் கேப்டனாக இந்திய அணித் தலைவர் விராட் கோலி இடம் பெற்றுள்ளார். அடுத்ததாக இதில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் அஸ்வின் சில வருடங்களாக டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். எனவே இந்த பட்டியலில் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியில் மிக சிறப்பாக ஆடிய முக்கிய விளையாட்டு வீரராகத் தேர்வு செய்யப்பட்டு பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
இவர்களைத் தவிர ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், அலைஸ்டர் குக், ஸ்டுவர்ட் போர்ட், ஜேம்ஸ் ஆண்டர்சன், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், இலங்கையின் குமார் சங்ககாரா, தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டேயின் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
இதைத் தவிர டி 20 மற்றும் ஒரு நாள் போட்டி விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மூன்று அணிகளில் டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக தோனி அறிவிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணிக்கு கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியில் தோனி இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.