அறிவோம் தாவரங்களை – குமிழ் மரம்
குமிழ் மரம் (Gmelina Arborea Tree)
பாரசீகம் உன் தாயகம் !வரப்புகள்,வாய்க்கால், ஓடைகளில் அதிகமாய் வளரும் அழகு மரம் நீ!
தேக்கு மரம் உன் தம்பி மரம் !
கிரிக்கெட் விளையாட மட்டை தரும் குமிழ் மரம் நீ!
30 மீ.வரை உயரம் வளரும் முதன்மை மரம் நீ !
மியான்மர், கம்போடியா, தாய்லாந்து, சீனா, மலேசிய நாடுகளில் அதிகமாய் வளரும் வேளாண் மரம் நீ !
வெள்ளைப்படுதல், பசியின்மை, தாய்ப்பால் சுரப்பு , புத்தி பேதலிப்பு, வலிப்பு ,காய்ச்சல், ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ !
ஜன்னல், கதவு, நிலைகள், கைவினைப் பொருட்கள், மரச்சாமான்கள்,பென்சில், பிளைவுட், ஷோ கேஸ், செய்யபயன்படும் நயன்மிகு மரம் நீ!
பட்டுப் பூச்சிகளின் இலை உணவு மரமே!
அறுவடை செய்த பின்பும் துளிர்க்கும் அழகு மரமே!
ஐந்து ஆண்டுகளில் பலன் தரும் பசுமை மரமே !
குறைந்த காலத்தில் அதிக பலன் தரும் சிறந்த மரமே!
காற்று தடுப்பானே!
நீவிர் பல்லாண்டு வாழ்க!வளர்க!உயர்க!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்
நெய்வேலி.
☎️ 9443405050.